sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி

/

எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி

எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி

எஸ்.எஸ். ராஜன் கோப்பை திண்டுக்கல்,மதுரை அணிகள் தகுதி


ADDED : ஜன 02, 2025 05:34 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த இதில் திண்டுக்கல்,கிருஷ்ணகிரி அணிகள் மோதின. கிருஷ்ணகிரி அணி 18.4 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது. முகமது 3 விக்கெட் எடுத்தார். திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தனர். விஜய்பிரகாஷ் 43,ஆஷிக் 38 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக மதுரை,திருப்பூர் அணிகள் மோதின.

இதில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் ரிட்மேன் மைதானத்தில் நடந்த டி.20 போட்டியில் தென்காசி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தனர். நாமக்கல் அணி 16.3 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தனர். கவினேஷ்32 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக சிவகங்கை அணி 18.2 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தனர். தர்மபுரி அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த போட்டியில் கடலுார் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தன . கமலக்கண்ணன் 63 ரன்கள் எடுத்தார். தென்காசி அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது . மதன்பா44,சசிதரன் 3 விக்கெட் வீழ்த்தினார். பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடந்த போட்டியில் நாமக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

தர்மபுரி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தன. டி பிரிவில் திண்டுக்கல் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த சுற்று போட்டிகள் கோயம்புத்தூரில் பகல் இரவு போட்டிகளாக நடக்கும். ஹெச் பிரிவில் கடலுார் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தையும் சிவகங்கை 2 வெற்றிகளுடன் 2ம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.






      Dinamalar
      Follow us