ADDED : ஜூலை 17, 2025 12:49 AM
நத்தம்:நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா தொடங்கி வைத்தார்.
13 அரசு துறைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.
முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வடமதுரை: அய்யலுாரில் பேரூராட்சியின் முதல் 7 வார்டு பகுதியினருக்கான 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட குறைதீர் முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். தாசில்தார் சிக்கந்தர் சுல்தான் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் பத்மலதா வரவேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் வீரமணி, ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.