ADDED : ஆக 14, 2025 02:40 AM
வடமதுரை: சித்துவார்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வீரப்பன் வரவேற்றார்.
வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். 80 வயது மூதாட்டிக்கு மகளிர் உரிமை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சித்துவார்பட்டியில் மின்இணைப்புக்காக சம்சுன் நஷீராவுக்கு பெயர் மாற்றம் செய்ய கோரிய மனுவிற்கு அங்கே பரிசீலனை முடிந்து உத்தரவும் வழங்கப்பட்டது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கருப்பன், கணேசன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.
வேடசந்துார் : தட்டாரபட்டி ஊராட்சி காளணம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ., சரவணன்,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா.சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிசங்கர், கவிதா முருகன், மருதபிள்ளை, மாரிமுத்து, முருகவேல், முருகன் பங்கேற்றனர்.