/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநில கூடைப்பந்தாட்டம்; வத்தலக்குண்டு அணி வெற்றி
/
மாநில கூடைப்பந்தாட்டம்; வத்தலக்குண்டு அணி வெற்றி
ADDED : ஜன 18, 2024 06:22 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு யங் ஸ்டார் கூடை பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த மாநில கூடை பந்தாட்ட போட்டியில் வத்தலக்குண்டு அணி வெற்றி |பெற்றது.
24 அணிகள் பங்கேற்ற அதிக புள்ளிகள் பெற்ற பெரியகுளம், வடமதுரை , சென்னை, வத்தலக்குண்டு அணிகள் முதல் நான்கு இடங்களுக்கு போட்டியிட்டன.
இதன் இறுதிப் போட்டியில் சென்னை ஜே.பி.ஆர் பல்கலை அணியும் வத்தலக்குண்டு யங் ஸ்டார் அணியும் விளையாடியதில் 85 புள்ளிகளைப் பெற்று வத்தலக்குண்டு அணி முதலிடம் பெற்று ரூ. 20,000, சுழல் கோப்பையை கைப்பற்றியது. 80 புள்ளிகளை பெற்ற ஜே.பி.ஆர். பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ.15,000 பெற்றது.
3ம் இடத்தை வடமதுரை சேலஞ்சர்ஸ் அணி, 4ம் இடத்தை பெரியகுளம் அணி பெற்றது. பரிசுகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரான செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நகர செயலாளர் சின்னதுரை, யங்ஸ்டார் கூடைப்பந்து கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூடைப்பந்து செயலாளர் போஸ் நன்றி கூறினார்.