/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
/
ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
ADDED : செப் 14, 2025 03:53 AM

எரியோடு:ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி இறந்த எரியோடு ராணுவ வீரரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.
எரியோடு அய்யலுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் 33. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார்.
சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்தார்.
இவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு ரோடு வழியே நேற்று மாலை எரியோடு வந்தது.
அங்குள்ள எரிவாயு மயானத்தில் வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், டி.எஸ்.பி., பவித்ரா, பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நகர செயலாளர் செந்தில்குமார் உட்பட ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
போலீசாரின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது.

