நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஜி.டி.என். கலைக் கல்லுாரியின் பொருளியல் துறை சார்பாக இந்தியாவின் தலை சிறந்த புள்ளியியல் நிபுணர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய புள்ளிவிவர தினம் கொண்டாடப்பட்டது.
துறைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் ரெத்தினம், இயக்குநர் துரை பங்கேற்றனர்.
மாவட்ட புள்ளி இயல் துறை மாவட்ட துணை இயக்குநர் வினோதா பேசினார்.
நிகழ்ச்சியை பொருளியல் துறை உதவி பேராசிரியர் சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.