நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: மேலக்கோயில்பட்டியில் பா.
ஜ. க. தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது. கிளைதலைவர் செல்வபாண்டி தலைமை வகித்தார். நிர்வாகி தங்கபாண்டி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கரன் பேசினர். அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அன்ன களஞ்சியம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான், நிர்வாகிகள் ஜெகன், நாகராஜ், பிரேம் குமார், சின்னச்சாமி, அறிவகம், பார்த்திபன் , சவேரியார், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கேந்திர பொறுப்பாளர் தங்கப்பாண்டி செய்திருந்தார். நிர்வாகி ராஜபாண்டி நன்றி கூறினார்.

