ADDED : ஜூலை 13, 2025 12:19 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பேரவை பதவி ஏற்பு விழா நடந்தது.பள்ளி செயலாளர் பட்டாபிராமன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாணவத் தலைவர்களாக ஹரிஹரன், வந்தனா, துணைத் தலைமை மாணவர்களாக காட்ரிக் அன்சன், தன்யாஸ்ரீ, சுற்றுச்சூழல் மேம்பாட்டு மன்ற தலைமை மாணவர்களாக சஞ்சனா, பிரகதி, பொது அறிவுத் துறை மன்றம் தலைமை மாணவர்களாக நிஹாஸ்ரீ, தரன், உடல் நலம் , ஆரோக்கிய மேம்பாட்டு மன்ற தலைமை மாணவர்களாக ஆதீஸ்வரன், அபினவ், கலாசார மேம்பாட்டு மன்ற தலைமை மாணவர்களாக கிருத்திகா, இமயா, கலைத்துறை மன்றம் தலைமை மாணவர்களாக அன்ஷிகா, ஹனிஷா பிரபா, விளையாட்டு மன்றம் தலைமை மாணவர்களாக ருத்விக் ராகவ், அங்குஜித்தேஸ், இலக்கிய மன்றம் தலைமை மாணவர்களாக புவனேஷ், குருசரண் உறுதிமொழி ஏற்று தங்களின் அடையாளச் சின்னத்தினை வெளியிட்டனர். பள்ளி முதல்வர் சவும்யா கலந்து கொண்டார்.