/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி 5 மணி நேரம் பின் உடல் மீட்பு
/
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி 5 மணி நேரம் பின் உடல் மீட்பு
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி 5 மணி நேரம் பின் உடல் மீட்பு
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி 5 மணி நேரம் பின் உடல் மீட்பு
ADDED : ஜூன் 01, 2025 04:02 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.இவரது உடல் 5 மணி நேரம் பின் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன்கள் மணிகண்டன் 17, அன்பரசன் 15. அன்பரசன் வத்தலக்குண்டு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9 ம் வகுப்பு படிக்கிறார். கோடை விடுமுறை என்பதால் இவர் நேற்று மாலையில் அண்ணன் மணிகண்டனுடன் ராஜலட்சுமி நகர் அருகே உள்ள தனியார் விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.அன்பரசனுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்று தண்ணீரில் மூழ்கினார். தாலுகா போலீசார், தீயணைப்பு வீரர்கள் தேடினர். 5 மணி நேரம் பின் இறந்த நிலையில் அன்பரசன் உடல் மீட்கப்பட்டது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.