/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவிக்கு உதவித்தொகை வந்ததாக கூறி நுாதன மோசடி
/
மாணவிக்கு உதவித்தொகை வந்ததாக கூறி நுாதன மோசடி
ADDED : அக் 12, 2025 05:23 AM
பட்டிவீரன்பட்டி : சித்தரேவை சேர்ந்த மாணவிக்கு உதவித்தொகை வந்ததாக கூறி நுாதன பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
சித்தரேவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 41. இவரது மகள் ஸ்ரீபிரியா மதுரையில் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு நேற்று முன்தினம் எஜூகேஷன் ஆப் இந்தியா பெயரில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் மகளுக்கான ரூ.38500 கல்வி உதவித்தொகையை உங்களது ஜி.பே., கணக்கில் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.
அவரது பேச்சை நம்பியவர், ஜி. பே.,யில் பார்த்த போது வரவாகவில்லை. மறுமுனையில் பேசிய நபர் நெட்வொர்க் பிரச்னையாக உள்ளதால் பணம் ஏறவில்லை.
வீடியோ காலில் வருமாறு தெரிவித்துள்ளார். இவரும் வீடியோ காலில் வந்துள்ளார். அப்போது கியூ. ஆர்., கோடை வீடியோ காலில் காண்பித்து ஸ்கேன் செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஸ்கேன் செய்த பிறகு இவர்களது ரகசிய எண்ணை பதிவிடுமாறு கூறிஉள்ளானர்.
அவர்களும் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளனர். அதை வைத்து இவரது கணக்கில் இருந்து ரூ.18,500 எடுத்துவிட்டனர்.
இதேபோல் இதே ஊரை சேர்ந்த ஆர்த்தி என்பவரிடம் ரூ.9000, முருகன் என்பவரிடம் ரூ.5500 என ரூ.33,000 மோசடி செய்துள்ளார்.
மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. ரவிச்சந்திரன் திண்டுக்கல் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.