/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்
/
45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்
ADDED : மே 05, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் 1973 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் 45 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நல்லதம்பி தலைமை வகித்தார். ரவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மேரி, பள்ளி நிர்வாகிகள் துரைக்கண்ணு, வெங்கடேஷ், அழகிரிசாமி, பேபி விஜயராணி, ஹெலன், கயர் நிஷா மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.