UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 04:55 PM
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அரசு ஐ.டி.ஐ., அருகே காலை நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
குஜிலியம்பாறை – பாளையம் ரோட்டில் கரிக்காலி பிரிவு அண்ணா நகர் அருகே அரசு ஐ.டி.ஐ., செயல்படுகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை 8:30 முதல் 10:00 மணி வரை அரசு, தனியார் பஸ்களில் வருகின்றனர்.
ஆனால் காலை நேரத்தில் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் ஐ.டி.ஐ., அருகே நிற்பதில்லை. அடுத்துள்ள பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து வரும் சூழலால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தொழிற்பயிற்சி நிலைய மேலாளர் மும்மூர்த்தி கூறுகையில், ‘அரசு ஐ.டி.ஐ., ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவு உள்ளது. ஆனாலும் காலை நேரத்தில் சில பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்றனர்.
