/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சைக்கிளிங் போட்டியில் சாதித்த மாணவர்கள்
/
சைக்கிளிங் போட்டியில் சாதித்த மாணவர்கள்
ADDED : நவ 23, 2024 05:52 AM

வேடசந்துார்; திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிளிங் (சாலை மிதிவண்டி) போட்டிகளை சிறுமலை பிரிவில் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் ரகமத்கனி துவக்கி வைத்தார். இதில் கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பிரிவுகளில் விளையாடி 5 பிரிவுகளில் முதல் இடம், 2 பிரிவுகளில் இரண்டாம் இடம், ஒரு பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தனர்.
5 மாணவர்கள் அடுத்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர்கள் வீரமணி, முத்துமீனாள், விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்தியஜோதி பாராட்டினர்.

