/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரமில்லாமல் தயாரிக்கும் ரோட்டோர உணவுகள்: துறை அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்

ADDED : மார் 11, 2024 06:46 AM

மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கிய ரோடுகளில் ரோட்டோர கடைகள் அதிகம் செயல்படுகின்றன. இங்கு பாஸ்ட்புட் உணவுகள் விதவிதமாக தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரூசித்து சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் திறந்தவெளியில் தயாரிக்கப்படுவதால் ரோடுகளில் செல்லும் வாகனங்களின் கரும்புகை,ரோட்டோரத்திலிருக்கும் மணல் துகள்கள் உள்ளிட்டவைகள் இந்த உணவுகளில் படிந்திருக்கும். இதை வாங்கி உண்ணும் மக்கள் சில நேரங்களில் உணவு சாப்பிட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகும் நிலை உருவாகுகிறது.
இதைத்தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மவுனமாக இதுபோன்ற பிரச்னைகளை கடந்து செல்கின்றனர். பொது மக்கள் புகாரளித்தால் கணக்கிற்கு ஏதாவது ஒரு பகுதியில் செயல்படும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் தாராளமாக ரோட்டோர கடைகளை நடத்துகின்றனர். அதிகாரிகள் ரோட்டோர கடைகளில் ஆய்வு செய்வதோடு பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவுகளை தரமாக வழங்க வேண்டும். துாய்மையாக தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.