UPDATED : நவ 07, 2026 03:49 PM
ADDED : நவ 07, 2026 03:44 PM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் முன் குவிந்துள்ள குப்பையால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் ரோட்டில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றி செல்லும் ஓடை தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. செடி கொடிகள் வளர்ந்து ஓடையை மறைத்துவிட்டது. மாலை நேரங்களில் கொசு தொல்லை இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் கோயில் முன் கொட்டப்படும் இலைகள், குப்பை அள்ளப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து பல மாதங்களுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இக்கோயிலை சுற்றி சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
