நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 வது பிறந்தநாள் ,நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகியோர் நினைவாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் பசுமை தமிழகம் திட்டம் சார்பாக 501 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரி அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் வாழ்த்தினார். பழ மரக்கன்றுகள்,மூலிகை செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடக் கூடிய இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய் ,சுதேசி விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் ஏற்பாடு செய்தனர்.