ADDED : அக் 18, 2024 07:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையை ஆய்வு செய்ய வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தனர்.
திண்டுக்கல் திருச்சி ரோட்டிலிருந்து கரூர்ரோடு செல்லும் ரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணி 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.17 கோடி மதிப்பில் துவங்கியது. பல ஆண்டுகளை கடந்தும் பணிகள் மெதுவாக நடந்ததால் இப்பாதையை மக்கள் தாமாகவே பயன்படுத்து வருகின்றனர். கழிவுநீர் தேக்கம், ரோடு சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது.
இதை தொடர்ந்து சுரங்கபாதையை சீரமைத்து சர்வீஸ் ரோடு,வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ராஜன் சுரங்கபாதையை ஆய்வு செய்தார்.
அப்போது எம்.வி.எம்.,நகர் மக்கள் சுரங்கப்பாதையால் ஏற்படும் சிரமங்களை முறையிட சுரங்கப்பாதையில் ஏற்படும் நீர் கசிவுகளை தடுக்கப்படும் என உறுதியளித்தார். உதவி கோட்டபொறியாளர் கேசவன்,உதவி கோட்ட பொறியாளர் லட்சுமி,உதவி பொறியாளர் சித்ரா பங்கேற்றனர்.