/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு; 217 பேர் ஆப்சென்ட்
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு; 217 பேர் ஆப்சென்ட்
ADDED : அக் 20, 2024 05:34 AM
திண்டுக்கல்,: மாவட்டம் முழுவதும் 23 மையங்களில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வை 5,806 மாணவர்கள் எழுதியதில் 217 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ம 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாதம் ரூ.1,500 வீதம் 22 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 6023 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 23 மையங்களில் தேர்வு நடந்தது. 5806 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 217 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.