/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஊர்வலம்
/
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஊர்வலம்
ADDED : அக் 06, 2025 05:59 AM

பழநி : பழநியில் நடைபெற உள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பழநியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், 10 வது மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலம் மயில் ரவுண்டானா, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, கான்வென்ட் ரோடு வழியாக மின்வாரிய திடலுக்கு வந்தது. அங்கு மாநிலத் தலைவர் டில்லி பாபு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் அதில இந்திய துணைத்தலைவர் பிருந்தாகாரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
எம்.பி.சச்சிதானந்தம், மாநில செயலாளர் சண்முகம், அகில இந்திய தலைவர் ஜிஜேந்திர சவுத்ரி, மாநில பொதுச்செயலாளர் சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நடராஜன் பங்கேற்றனர். மழை காரணமாக பொதுக்கூட்டம் விரைவில் நிறைவு செய்தனர்.