/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்
/
ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி முகாம்
ADDED : டிச 10, 2025 06:22 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் மனவளக்கலை ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. மண்டலத் தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், ரமேஷ், பிரசாந்தி, சண்முகபிரியா, விஜயலட்சுமி பேசினர். ஆசிரியர்கள் சீத்தாராமன், சக்திவேல், இந்திரா, சுப்பையா தலைமையில் குழு விவாதம் நடத்தினர்.அறிவுத்திருக்கோயில் மூலம் கர்நாடக மாநிலம் ஜெயின்
பல்கலைக்கழகத்தில் யோகமும், மனித மாண்பும் பட்டயப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன. மண்டல செயலாளர் பாலசுந்தர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை சரவணன், சக்திவேல், மதிவாணன், இளங்கோ செய்தனர்.

