/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 04:59 AM

திண்டுக்கல்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலையை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலையை கண்டித்தும்,பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டியும் திண்டுக்கல்லையடுத்த நல்லம நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து நிலை ஆசிரியர்களும் பங்கேற்று நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. டிட்டோஜேக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்வில்சன், ஆர்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ்,கணேசன் பங்கேற்றனர்.
பழநி : பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இறந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.