ADDED : ஜூலை 28, 2025 06:16 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தெரசா பல்கலையில் நடந்தது.
மாநிலத் தலைவர் தமிழ்மணியன் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கணேஷ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சுரேஷ், துணைத்தலைவர் குமரவேல், சாலை செந்தில், ராஜேஷ் கண்ணா உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 ஆண்டுகளாக உள்ள நடைமுறைப்படி பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவிகிதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.