/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி
/
வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி
ADDED : ஜன 31, 2024 06:56 AM

திண்டுக்கல் : தேய்பிறை பஞ்சமியையொட்டி திண்டுக்கல் மாவட்ட வாராஹிஅம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மாவட்டத்தில் அனைத்து வாராஹி அம்மன் கோயில்களிலும் தேயிறை பஞ்சமியையொட்டி தீபாராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திண்டுக்கல் கிழக்கு ரத வீதி ஜான் பிள்ளைசந்து வாராஹி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள், தேங்காய், இளநீர், பால், எலுமிச்சை, தயிர், மஞ்சள் - குங்குமம், திருமஞ்சனம் என 10 வகையான அபிேஷகங்கள் ,பழங்களைக் கொண்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து உபகார பூஜை, அம்மனுக்கு அலங்கார சேவை, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய், பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். திண்டுக்கல்லை தாடிகொம்பு, அகரம் சுக்காம்பட்டி ஸ்ரீவாஸ்து ஈஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீவெற்றிவாராஹிஅம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி :கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக பூஜையில் வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.
திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.