/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் அலைபேசி சோதனை பெயரில் நெரிசலை உருவாக்கும் கோயில் நிர்வாகம்

ADDED : டிச 30, 2024 06:18 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பாத விநாயகர் கோயில் படிப்பாதை அருகே அலைபேசி சோதனை பெயரில் நெரிசலை உருவாக்கும் விதம் கோயில் நிர்வாகம் செயல்படுகிறது.
இக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாத விநாயகர் கோயில் அருகே தட்டு வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடமாநில நபர்களின் குழந்தைகள் பக்தர்களிடம் யாசகம் கேட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் அதே பகுதியில் கோயில் நிர்வாகம் மங்கம்மாள் மண்டபத்தில் ஒலிபெருக்கி மூலம் அலைபேசிகளை பக்தர்கள் அலைபேசி பாதுகாப்பு மையத்தில் வைத்து வர அறிவுறுத்தினர். அங்கு இரு தனி வரிசையில் கோயில் செல்லும் பக்தர்களிடம் குறுகலான பாதையில் அலைபேசி உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். அறிவிப்பை மீறி அலைபேசியை கொண்டு வரும் பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இப்பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. நெரிசலை தவிர்க்க கோயில் நிர்வாகம் பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து பணியாளர்களை அதிகம் நியமித்து அலைபேசி சோதனை வரிசைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.