UPDATED : அக் 27, 2026 12:44 AM
ADDED : அக் 27, 2026 12:44 AM
அ நிறம் | அளவு
கொடைரோடு: மாவுத்தன்காலாடிபட்டியில் மழை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் யாக சாலையில் வைக்கப்பட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் என ஐந்து கால யாக வேள்விகள், சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஜெகநாத பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது கருடன் வானில் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ‘ஓம் சக்தி, பராசக்தி’ என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பக்தர் களுக்கு அன்னதானம் நடந்தது.
