/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தங்கம்மாபட்டி கோயில் கும்பாபிஷேகம்
/
தங்கம்மாபட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 01, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி கன்னிமூல கணபதி, சக்திவேல்முருகன், ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்றுமுன்தினம் மகா கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் பின் கடம் புறப்பாடாக கும்பங்களில் புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
அய்யலுார் மகாகாளியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ரெங்கராஜ், சீனீவாசன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் கருப்பன், முன்னாள் தலைவர் டி.சி.ராஜமோகன், தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, அ.தி.மு.க.,நகர செயலாளர் ராகுல்பாபாபங்கேற்றனர்.