/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறுபுறம் ரோடு தடுப்பில் மோதிய கார்
/
நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறுபுறம் ரோடு தடுப்பில் மோதிய கார்
நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறுபுறம் ரோடு தடுப்பில் மோதிய கார்
நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறுபுறம் ரோடு தடுப்பில் மோதிய கார்
ADDED : அக் 27, 2024 01:52 AM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற கார் டிவைடரை தாண்டி மறுபுறம் ரோடு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கரூரை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
கரூர் பள்ளபட்டியை சேர்ந்தவர் ஜாஸிம் அகமது 50. இவரது மனைவி அபிப் நிஷா. இவர்களது மகள் அஸ்மா சித்திக்கா. இவர்கள் காரில் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் மாலை தாடிக்கொம்பு வழியாக பள்ளப்பட்டி நோக்கி சென்றனர். ஜாஸிம் அகமது கார் ஓட்டினார்.
நான்கு வழிச் சாலையில் வேடசந்துார் லட்சுமணன்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரை தாண்டி மறுபுறம் ரோட்டுக்கு சென்றது.
அவ்வழியாக வந்த டூவீலரில் உரசியபடி சாலையோர தடுப்பில் மோதி நின்றது.
காரில் வந்த மூவரும் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.