/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏ.டி.எம்.,ல் கிழிந்த ரூபாய அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்
/
ஏ.டி.எம்.,ல் கிழிந்த ரூபாய அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்
ஏ.டி.எம்.,ல் கிழிந்த ரூபாய அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்
ஏ.டி.எம்.,ல் கிழிந்த ரூபாய அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்
ADDED : பிப் 08, 2024 05:06 AM
வடமதுரை : அய்யலுார் தனியார் ஏ.டி.எம்., ல் எடுக்கப்பட்ட பணம் கிழிந்த நோட்டுகளாக வந்ததால் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.
அய்யலுார் எத்தலப்பநாயக்கனுாரைச் சேர்ந்த டிரைவர் திருமூர்த்தி 31. நேற்று முன்தினம் இரவு அவசர தேவைக்காக பணம் எடுக்க அய்யலுாரில் தனியார் நிறுவன ஏ.டி.எம்.,க்கு சென்று ரூ. 4000 பணம் எடுத்தார். அதில் ரூ.3500க்கு ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் செலோ டேப் ஒட்டி இருந்தது. இதனால் அவசர தேவைக்கு பணம் எடுத்த திருமூர்த்தி அதிர்ச்சியடைந்தார்.
திருமூர்த்தி கூறுகையில்,அவசர தேவைக்காக ஏ.டி.எம்.ல் எடுத்த பணம் கிழிந்த நோட்டுகளாக வந்ததால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஏ.டி.எம்.ல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைப்பது என்பது மிகவும் மோசமான நடைமுறை. அரசு இதுவிஷயத்தில் வங்கி அமைப்புகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றார்.