/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பில் குளங்கள், மணல் கொள்ளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு வராத அதிகாரிகள் கண்டித்த டி.ஆர்.ஓ., விவசாயிகள் கு றைதீர் கூ ட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காமல் அலுவலர்கள் பங்கேற்பது வாடிக்கையாகி வருகிறது. நேற்று கனிமவளம் தொடர்பான கேள்விகள் அதிகம் எழுந்த நிலையில் அத்துறை சார்பில் பங்கேற்ற அலுவலரோ அமைதியாக நின்றார். இதேபோல் பழநி தாசில்தார் அலுவலக அலுவலரும் அமைதியாக நின்றார். குறுக்கிட்ட நேர்முக உதவியாளர் (வேளாண்) நாகேந்திரன், இதை சாதாரண கூட்டமாக நினைக்காதீங்க. பலமுறை அறிவுறுத்தியும் அலுவலர் பங்கேற்பது சரியல்ல என்றார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி ,பங்கேற்காத அதிகாரிகள் குறித்து கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்படும். அவரிடம் விளக்கமளியுங்கள் என கண்டித்தார்.

ADDED : அக் 25, 2025 04:44 AM

திண்டுக்கல்: குளங்களில் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, வனவிலங்குகளால் பாதிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார்.
வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், தோட்டகலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் விவாதம்:
நல்லுச்சாமி, ஒட்டன்சத்திரம்: சின்னக்குளம் ஆக்கிரமிப்பில் உள்ளது. மழைக்காலம் துவங்கி விட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்திற்கான வழிவகை செய்ய வேண்டும்.
நாகேந்திரன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை): மழைக்காலம் துவங்கிவிட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட துறை யினருக்கு அறிவுறுத்தப்படும்
சின் னச் சாமி, தொப்பம்பட்டி: எங்கள் பகுதியில் உள்ள வண்டிப்பாதை 40 அடி அகலம் கொண்டது. ஆனால் ஆக்கிரமிப்பில் உள்ளது. விவசாயிகள் காய்கறிகள், தானியங்களை எடுத்துச்செல்ல சிரமப்படுகின்றனர். உரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
நேர்மு க உதவியாளர் (வேளாண் ): ஆக்கிரமிப்பு புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தட்டுபாடின்றி கிடைப்பது குறித்து உறுதி செய்யப்படும்.
செல்லம், தும்பலப்பட்டி: மஞ்சளாறு அணையில் கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் மேட்டூர் அணையில் உள்ளதைப்போல் குழாய் வழியாக திண்டுக்கல் வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.
விஜயராகவன், சாணார்பட்டி: குறும்பட்டி அருகே உள்ள மந்தைக்குளம் கண்மாய் 45 சென்ட் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.ஓ.,: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரப்பன், குஜிலியம்பாறை: சின்னக்குளத்தில் இரவு, பகலாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்க வேண்டும்.தாலுகா அலுவலகம் அருகே நடக்கிறது.
நேர்முக உதவியாளர் (வேளாண்): அனுமதி கொடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்படுகிறதா என ஆய்வு செய்யப்படும்
டி. ஆர். ஓ.,: மணல் அள்ளப்படுவதில் விதிமீறல் இருந்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம்: கன்னிவாடி, பன்றிமலை, பழநி என மலையையொட்டிய பகுதிகளில் காட்டுமாடுகள், பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
நேர்முக உதவியாளர் (வேளாண்): வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, வேடந்துார்: மழையால் அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. ஆனால் குடகனாறு அணைக்கு தண்ணீர் வரத்தே இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைகள் வழியாக வரும் நீர் ஆத்துார் அருகே ராஜவாய்க்கால் மூலம் பிரிக்கப்பட்டு நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.
(அப்போது விவசாயிகளில் சிலர் ராஜவாய்க்காலை பற்றி ஏன் பேசுகிறீர்கள். தவறான தகவலை பதிவு செய்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அதிகாரிகள் சமாதானம் செய்த னர்.)