/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி விவசாயியை தேடுது வனத்துறை
/
மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி விவசாயியை தேடுது வனத்துறை
மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி விவசாயியை தேடுது வனத்துறை
மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி விவசாயியை தேடுது வனத்துறை
ADDED : செப் 28, 2024 02:52 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளப்பட்டி அருகே மின்வேலியில் சிக்கி இறந்த காட்டு மாடு உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயியை வனத்துறையினர் தேடுகின்றனர்.
கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமு. இவருக்கு பள்ளப்பட்டி வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளது. இதில் 2 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளார். இந்த பயிர்களை விலங்குகள் சேதம் செய்ய கூடாது என்பதற்காக மின்வேலி அமைத்திருந்தார். இரவு நேரங்களில் அதில் மின்சாரத்தை செலுத்தி உள்ளார்.
2 நாட்களுக்கு முன் வனப்பகுதியிலிருந்து வந்த காட்டுமாடு மின்வேலியில் சிக்கி இறந்தது. இதன் உடலை தோட்டத்தின் நடுவே குழி தோண்டி புதைத்தார். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,உதவி வன அலுவலர் நிர்மலா,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதைக்கப்பட்ட காட்டுமாடை உடலை மீட்டு கால்நடை டாக்டர்கள் உதவியோடு பரிசோதனை செய்தனர். ராமு வெளியூர் சென்றிருப்பதால் அவரை கைது செய்ய வனத்துறையினர் சென்றுள்ளனர்.