/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் செப்.25ல் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்; வாகனம் மூலம் அறிவிப்பு செய்கிறது நெடுஞ்சாலைத்துறை

ADDED : செப் 20, 2024 06:10 AM
கொடைக்கானல் : - கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் வாகனம் மூலம் அறிவிப்பு செய்து வருகிறது.
கொடைக்கானலில் சீசன் , தொடர் விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்நிலையை தவிர்க்க ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினர். சில ஆண்டாக இதன் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது நீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றுதலில் முனைப்பு காட்டி வருகிறது.
வருவாய்த்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்த நடவடக்கையில் இறங்கியுள்ளது.
வெள்ளி நீர்வீழ்ச்சி ஏரிசந்திப்பு வரை ரோட்டோர ஆக்கிமிப்புகளை தானாக அகற்றிக் கொள்ள வேண்டும்.
மீறும் பட்சத்தில் செப்.25 ல் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை வாகனம் மூலம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதை தொடர்ந்து திண்டுக்கல் எஸ்.-பி., பிரதீப் பொதுமக்கள் ,வணிகர்கள் , சமூக ஆர்வலர்களிடம் போக்குவரத்து மாற்றம் குறித்து விவாதித்தும், ஆக்கிரமிப்பு அகற்றும் பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
எஸ்.-பி., பிரதீப் கூறுகையில்,'' கொடைக்கானலில் நெரிசலை தவிர்க்க பொதுமக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது, அதன்படி இரு வாரங்களில் மாற்றம் கொண்டு வரப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுதலில் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தப்பட்டது'' என்றார். ஆர்.டி.ஒ., சிவராம், டி.எஸ்.பி, மதுமதி பங்கேற்றனர்.