/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்தவெளி பாராக, சமூக விரோதிகள் கூடாரமாகும் தொலை நோக்கி கொடைக்கானல் 14 வது வார்டில் தொடரும் அவலம்
/
திறந்தவெளி பாராக, சமூக விரோதிகள் கூடாரமாகும் தொலை நோக்கி கொடைக்கானல் 14 வது வார்டில் தொடரும் அவலம்
திறந்தவெளி பாராக, சமூக விரோதிகள் கூடாரமாகும் தொலை நோக்கி கொடைக்கானல் 14 வது வார்டில் தொடரும் அவலம்
திறந்தவெளி பாராக, சமூக விரோதிகள் கூடாரமாகும் தொலை நோக்கி கொடைக்கானல் 14 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஆக 22, 2025 02:49 AM

கொடைக்கானல்: திறந்தவெளி பாராக , சமூக விரோதிகளின் கூடாரமாகும் பயனற்ற தொலை நோக்கியால் கொடைக்கானல் நகராட்சி 14 வது வார்டு மக்கள் அவதியுறுகின்றனர்.
மலர்ந்த ரோஜா, பில்டிங் சொசைட்டி, குறிஞ்சியாண்டவர் கோயில், எம்.எம்.தெரு, சிவனடி ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான குறிஞ்சியாண்டவர் கோயில், செட்டியார் பூங்கா உள்ளது.
வார்டில் தெருவிளக்கு வசதி இன்றி இரவில் இருள் சூழந்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதியுறும் நிலை தொடர்கிறது .
அனுமதியற்ற காட்டேஜ்களில் தொடரும் அத்துமீறலால் குடியிருப்பு வாசிகள் அவதியுறுகின்றனர். திறந்தவெளியை பாராக பயன்படுத்தும் குடிமகன்களால் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
காட்டுமாடு நடமாட்டத்தால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வார்டு முழுமையும் திறந்த வெளியை பாராக பயன்படுத்தும் குடிமகன்கள் மதுபாட்டில், உணவு பொட்டலங்களை வீசி செல்கின்றனர். பில்டிங் சொசைட்டி பகுதியில் அமைத்த தெரு விளக்குகள் மாயமாகி தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதோடு பட்டா இல்லாத அவலம், பெண் கவுன்சிலரின் கணவர் ஆதிக்கம் என ஏராளமான பிரச்னைகள் வார்டில் உள்ளன.
வாகனங்களால் நெரிசல் அண்ணாதுரை, இயற்கை ஆர்வலர் : பில்டிங் சொசைட்டியில் உள்ள தொலைநோக்கி மூலம் பழநி கோயில் தோற்றத்தை காணலாம். சுற்றுலாத்துறை மூலம் சில ஆண்டுகள் செயல்பட்ட இம்மையம் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் இது புதர் மண்டி சேதமடைந்துள்ளது. மது அருந்துவது, பெண்களை தனிமையில் சந்திக்கும் பகுதியாக உருமாறி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் முகம் சுளிக்கின்றனர். குப்பை சரிவர அள்ளப்படுவதில்லை. அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பு முதல் கேபிஎஸ் பள்ளி வரை காலை, மாலையில் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள்,பொதுமக்கள் இப்பகுதியை கடக்க ஒரு மணி நேரமாகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சேதமான ரோடு ரமேஷ், வணிகர் : கவுன்சிலர் வார்டு பிரச்னை குறித்து கண்டுகொள்வதில்லை. பெண் கவுன்சிலர் என்பதால் கணவர் ஆதிக்கம் செலுத்துகிறார். வார்டில் ஏராளமானவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. அனைவருக்கும் பட்டா கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி மட்டும் அளித்த கவுன்சிலர் அதன்பின் நடவடிக்கை எடுக்கவில்லை. வார்டில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகரித்துள்ள தெரு நாய்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ரேஷன் பொருள்கள் எடை குறைவாக வழங்கும் போக்கு உள்ளது. தெருவில் குழாய் இணைப்புக்காக பள்ளம் தோண்டி சீரமைக்காததால் ரோடு சேதமடைந்துள்ளது.

