/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி உடல் அடக்கம் செய்த போது கைப்பற்றிய போலீஸ்

ADDED : நவ 02, 2024 07:06 AM
திண்டுக்கல் : சிறுமலையில் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த விவசாயியின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது சந்தேகத்தின்போது போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர் .
சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த விவசாயி பெருமாள்50. 2 நாட்களுக்கு முன் மாயமானார்.
அவரது உறவினர்கள் சிறுமலை முழுவதும் தேடிப்பார்த்த நிலையில் அவரது தோட்டத்து கிணற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது உடலை அப்பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இத்தகவல் தாலுகா போலீசாருக்கு தெரியவர அகஸ்தியர்புரம் சென்று அடக்கம் செய்ய இருந்த பெருமாளின் உடலை கைப்பற்றி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரிக்கின்றனர்.
பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூடுதல் தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.