/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூம்பூர் குளத்தில் அள்ளப்படும் மண்ணால் பாழாகும் குளம்
/
கூம்பூர் குளத்தில் அள்ளப்படும் மண்ணால் பாழாகும் குளம்
கூம்பூர் குளத்தில் அள்ளப்படும் மண்ணால் பாழாகும் குளம்
கூம்பூர் குளத்தில் அள்ளப்படும் மண்ணால் பாழாகும் குளம்
ADDED : நவ 14, 2024 07:15 AM

குஜிலியம்பாறை; கூம்பூர் பெரியகுளத்தில் அள்ளப்படும் மண்ணால் குளம் பாழாகும் நிலையில் இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூம்பூர் ஊராட்சியில் உள்ளது பெரியகுளம். 80 ஏக்கரில் உள்ள இந்த குளத்தில் சில நாட்களாக 10 க்கு மேற்பட்ட லாரிகளில் செம்மண் திருட்டு நடைபெற்று வருகிறது. இதுவரை மண் திருட்டு நடைபெறாமல் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த குளத்தில் மேலோட்டமாக உள்ள களிமண்ணை அள்ளி செல்வதால் அடுத்து தண்ணீர் தேங்கினாலும் குளத்தில் தேங்கி நிற்காத வகையில் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
இதனால் குளத்தின் தன்மை முற்றிலுமாக மாறும் நிலை உள்ளது. இது குறித்து மண் அள்ளி செல்லும் லாரி டிரைவர்களிடம் கேட்டபோது குடகனாறு அணை வாய்க்கால் பணிக்காக அள்ளி செல்கிறோம் என்றனர்.
இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குடகனாறு அணையின் உள்பகுதியில் மண்ணை அள்ளி இருக்கலாம். அணையும் ஆழமாகி இருக்கும். அதை விடுத்து கிராமப்புறத்தில் உள்ள ஒரு குளத்தை திட்டமிட்டு பள்ளமாக்கி மண் அள்ளிச் செல்வதால குளம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
குடகனாறு அணை உதவி பொறியாளர் மகேஸ்வரனிடம் கேட்டபோது ,''அணையின் வாய்க்கால் பணிக்காகத்தான் அள்ளுகிறோம். எதிர்ப்பு இருந்தால் நிறுத்தி விடுகிறோம் ''என்றார்.
இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக பயன்படும் இக்குளத்தில் தொடர்ந்து மண் அள்ளுவதை நிறுத்தவும் மக்களின் குடிநீர் தேவை கருதி குடகனாறு அணை தண்ணீரை கொண்டு இக்குளத்தை நிரப்பவும் கலெக்டர் முன்வர வேண்டும்.

