/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.5க்கு வந்த சவ்சவ் விலை கொடிகளில் கருகும் அவலம்
/
ரூ.5க்கு வந்த சவ்சவ் விலை கொடிகளில் கருகும் அவலம்
ADDED : ஜன 24, 2025 01:41 AM

திண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் விளையும் சவ்சவ் விலை குறைந்து கிலோ, 5 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் கொடிகளிலேயே விட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில், சவ்சவ் 100 ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்படுகிறது. இங்கு மட்டும், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இச்சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து சவ்சவ், திண்டுக்கல், மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது.
சீசன் துவங்கியுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு முன் கிலோ, 12 ரூபாய்க்கு விற்பனையான சவ்சவ் தற்போது, 5 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.செலவுகளுக்குக் கூட பணம் கிடைக்காததால், அறுவடைக்குத் தயாரான சவ்சவ் காய்களை பறிக்காமல் அப்படியே கொடிகளிலேயே விட்டுள்ளனர்.
விவசாயி விக்னேஷ் தியாகராஜன் என்பவர் கூறியதாவது:
சவ்சவ் நல்ல விலைக்கு போகும் என்ற நம்பிக்கையில் அதிகளவில் இந்தாண்டு பயிரிட்டோம். காய்களும் நல்ல முறையில் காய்த்துள்ளது. இருந்தபோதிலும் விலை குறைந்ததால் பாதிப்பு ஏற்படுகிறது. நஷ்டத்தை ஈடுகட்ட முடியாதால், கொடிகளிலேயே விட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

