/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வராத காந்திநகர் கணவாய்பட்டி ரோட்டை இணைக்கும் திட்டம் ரூ. 70 லட்சம் வீணாகிறதா
/
வராத காந்திநகர் கணவாய்பட்டி ரோட்டை இணைக்கும் திட்டம் ரூ. 70 லட்சம் வீணாகிறதா
வராத காந்திநகர் கணவாய்பட்டி ரோட்டை இணைக்கும் திட்டம் ரூ. 70 லட்சம் வீணாகிறதா
வராத காந்திநகர் கணவாய்பட்டி ரோட்டை இணைக்கும் திட்டம் ரூ. 70 லட்சம் வீணாகிறதா
ADDED : ஜூலை 28, 2025 05:22 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் கே.கே நகர் பாலம், தடுப்புச் சுவர், இணைப்பு ரோடு ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 70 லட்சம் நிதி திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
காந்திநகர் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மெயின் ரோட்டை அடைவதற்கு அதிக சிரமம் ஏற்படுவதால் பில்டிங் சொசைட்டி தெரு மற்றும் சின்ன பள்ளி வாசல் தெரு வழியாக செல்வதற்கு வழியை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு கேகே நகர் ஓடை பாலம், 60 அடிக்கு புதியதாக ரோடு அமைத்தல், தடுப்புச் சுவர் கட்டுதல் என ரூ. 70 லட்சத்திற்கு திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை அமைச்சர் பெரியசாமி தலைமையில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
பில்டிங் சொசைட்டி தெரு, சின்ன பள்ளி வாசல் தெருவை இணைப்பதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பேரூராட்சி மூலம் அகற்றப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டும் பணி துவங்கியது.
இதற்கிடையே இணைப்பு ரோடு அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் முடங்கியது. தற்போது பாலம் மற்றும் அமைக்கப்பட்டு ரோடு அமைக்காமல் செம்மண் பரப்பிய அளவில் பணி நின்று விட்டது. வாகன ஓட்டிகள் செம்மண் புழுதிக்கிடையே சென்று வருகின்றனர்.
குடியிருப்பு வாசிகளும் புழுதியால் அவதிப்படுகின்றனர். இணைப்பு ரோடு அமைக்கப்பட்டால் மட்டுமே காந்தி நகர் ரோட்டில் ஏற்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். பேரூராட்சி நிர்வாகம் விரைவாக இணைப்பு ரோடு அமைக்க வேண்டும் என்பது காந்திநகர், கே.கே நகர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும் சரவணன், பா.ஜ.க., நிர்வாகி காந்திநகர், வத்தலக்குண்டு: காந்திநகர் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட்டை கடப்பதற்கு சிரமமாக உள்ளது. குறுகிய திருப்பங்கள் இருப்பதால் கார், ஆட்டோ செல்வதில் பிரச்னை உள்ளது. இதனை தீர்ப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டபோது, பொதுமக்களின் வரவேற்பை பெற்ற அந்தத் திட்டம் பாதியில் நின்றுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை கட்டும் பணி துவங்கவில்லை ராஜா, கே.கே நகர், வத்தலக்குண்டு: புதிதாக பாலம் கட்டுவதற்காக கே.கே நகர் பகுதியில் கழிவுநீர் சாக்கடை அடைபட்டு இருந்தது. பாலம் கட்டும் பணி முடிந்தாலும் சாக்கடை கட்டும் பணி துவங்காததால் கே.கே நகரில் உள்ள 4 தெருக்களிலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. விரைவில் புதிய சாக்கடை அமைத்து கழிவு நீரை ஓடையில் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.