sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 புதர் மண்டிய ஆர்.டி.ஓ., அலுவலகம் முகம் சுளிக்கும் பொது மக்கள்

/

 புதர் மண்டிய ஆர்.டி.ஓ., அலுவலகம் முகம் சுளிக்கும் பொது மக்கள்

 புதர் மண்டிய ஆர்.டி.ஓ., அலுவலகம் முகம் சுளிக்கும் பொது மக்கள்

 புதர் மண்டிய ஆர்.டி.ஓ., அலுவலகம் முகம் சுளிக்கும் பொது மக்கள்


ADDED : பிப் 22, 2026 07:28 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் ஆர்.டி.ஓ., அலுவலகம் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது.

கொடைக்கானல் ஆனந்தகிரி 4வது தெருவில் உள்ளது ஆர்.டி.,ஓ அலுவலகம். இங்கு நாள்தோறும் பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தமான ஆவணங்கள் பெற ஏராளமானோர் வருவது வழக்கம்.

மேலு ம் இங்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. அலுவலக வளாகத்தை சுற்றி புதர்மண்டி விஷப் பூச்சிகள் நடமாடும் பகுதியாகவும், அருகில் உள்ள குடிநீர் கிணறு பயனற்று மாசடைந்த நிலையிலும், பொது மக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பயனற்ற நிலையில் உள்ளன. மேலும் சுற்றுச்சுவர் வசதியின்றி ஆடு, மாடுகள் மேயும் மேய்ச்சல் தளமாக உருமாறியுள்ளன. சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட கேளிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் பின்பகுதியில் குடியிருப்புப் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் வளாகப் பகுதியில் சென்று துர்நாற்றமும், கொசுக்கள் அதிகரித்து உடல் உபாதைகள் ஏற்படும் அபாயகரமான அலுவலகமாக செயல்படுகிறது. உயர் அதிகாரிகள் வந்து செல்லும் இப்பகுதியை பராமரிக்க ஏனோ அதிகாரிகளுக்கு மனம் இல்லாத நிலை உள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தை பராமரித்து துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us