/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் கொட்டியது மழை வீடு, கடைகளில் புகுந்த நீர்; பொதுமக்கள் மறியல்
/
மாவட்டத்தில் கொட்டியது மழை வீடு, கடைகளில் புகுந்த நீர்; பொதுமக்கள் மறியல்
மாவட்டத்தில் கொட்டியது மழை வீடு, கடைகளில் புகுந்த நீர்; பொதுமக்கள் மறியல்
மாவட்டத்தில் கொட்டியது மழை வீடு, கடைகளில் புகுந்த நீர்; பொதுமக்கள் மறியல்
ADDED : அக் 27, 2024 04:25 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 223 மி.மீ., மழையளவு பதிவான நிலையில் வீடுகள் , கடைகளில் மழைநீர் புகுந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியத்திற்கு பின் மழை கொட்டி தீர்த்தது. திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடாது இரவு வரை மழை நீடித்தது.
திண்டுக்கல், நிலக்கோட்டையில் 71 மி.மீ., மழை பதிவானது. இதனால் திண்டுக்கல்லின் நகர் தாழ்வான பகுதி வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்தது.
மெயின் ரோடு, ஆ.எஸ்., ரோடு, பழநி ரோடு, வத்தலகுண்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் பாதித்தனர்.
குடைப்பாறைப்பட்டி அந்தோணியார் கோயில் தெரு கல்லறையில் மழைநீர் புகுந்து அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகின. குடியிருப்போர் அப்பகுதி கோயிலில் தங்க வைக்கப்பட்டனர்.
குடைப்பாறைப்பட்டி மட்டுமின்றி ஏபி.நகர் பகுதியிலும் கழிவுநீர் கலந்த மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
வருவாய்த் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு மழை நீர் புகுந்த வீடுகளில் ஆய்வு செய்து தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இருப்பினும் குடைப்பாறைப்பட்டி, ஏபி.நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்புகளுக்கு வரும் விவகாரத்தை முன் வைத்து நேற்று காலை வத்தலகுண்டு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.