/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் கண்ணாடியை உடைத்து திருடியவர் கைது
/
கார் கண்ணாடியை உடைத்து திருடியவர் கைது
ADDED : ஜன 29, 2024 06:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார் கண்ணாடியை உடைத்து கேமரா உள்ளிட்டவற்றை திருடிய திருச்சியைச் சேர்ந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கண்ணுரைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத். திண்டுக்கல் அங்கு விலாஸ் அருகேகாரை நிறுத்திய போது, காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த கேமராவுடன் கூடிய 2 பேக்குகளை மர்ம நபர் திருடி சென்றார். குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.,பிரதீப் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் அமுதா, குற்ற பிரிவு சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு அடங்கிய தனிப்படையினர் சி.சி.டிவி.பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த செல்வக்குமரன் 45,என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திருடு போன கேமரா, 2 பேக்கு கள் பறிமுதல் செய்யப்பட்டது.