/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
/
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
ADDED : ஜூன் 18, 2025 04:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.
அபிராமி அம்மன் கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன், குள்ளன்பட்டி சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
கன்னிவாடி : தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால் அபிஷேகம் செய்ய விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு பால்,பழம்,பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் , தீபாராதனை நடந்தது.
காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில்முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.