/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆர்.எஸ்.எஸ்., கிளை கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெறுவதில்லை; தமிழக, கேரளா மாநில செயலாளர் பெருமிதம்
/
ஆர்.எஸ்.எஸ்., கிளை கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெறுவதில்லை; தமிழக, கேரளா மாநில செயலாளர் பெருமிதம்
ஆர்.எஸ்.எஸ்., கிளை கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெறுவதில்லை; தமிழக, கேரளா மாநில செயலாளர் பெருமிதம்
ஆர்.எஸ்.எஸ்., கிளை கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெறுவதில்லை; தமிழக, கேரளா மாநில செயலாளர் பெருமிதம்
ADDED : பிப் 28, 2026 06:30 AM

திண்டுக்கல்: ''ஆர்.எஸ்.எஸ்., கிளை உள்ள கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெறுவதில்லை'' என ஆர்.எஸ்.எஸ்., தமிழக கேரளா மாநிலங்களின் உடற்பயிற்சி செயலாளர் சங்கர் பேசினார்.
திண்டுக்கல் தனியார் மஹாலில் ஆர்.எஸ்.எஸ் நுாற்றாண்டு விழா நடந்தது. தருமபுர ஆதீனம் தலைமையில் திண்டுக்கல் கிளை சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் ஆசியுடன் வந்தே மாதரம்' தேசபக்தி பாடல் பாட நிகழ்ச்சி துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தமிழக கேரளா மாநிலங்களின் உடற்பயிற்சி செயலாளர் சங்கர் பாரத மாதாவுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் பேசியவதாவது : ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டை தொட்டுவிட்ட நிலையில் 30 ஆண்டுகள் முன்பு திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்., கிளை உள்ள கிராமங்களில் ஜாதி கலவரம் நடைபெற வில்லை. வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஹிந்துக்களின் ஒற்றுமையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தா பாறையில் விவேகானந்தர் நினைவு சின்னம் எழுப்பப் பட்டது.
சுனாமி பேரலையில் ஆயிரக் கணக்கணக்கானோர் தங்களது இன்னுயிரை விட்டனர். அவர்களை தகனம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் ஏற்பாடு செய்தனர். வீடு இழந்தோருக்கு வீடு கட்டி கொடுக்கப் பட்டன. இவை எல்லாம் ஆர் .எஸ் .எஸ் .,சாதனைகளில் சிறிய பணிகள் மட்டுமே. இன்னும் ஏராளமாக சொல்லிக் கொண்டு போகலாம் என்றார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், உறுப்பினர்கள் கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்தார். தேசிய கீதம் பாடல் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஆர்.எஸ்.எஸ்., மாநில மக்கள் தொடர்பு அலுவலர் சின்னபாலன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், சேவா பாரதி அமைப்பின் மாநிலச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாநில சமுதாய தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட திண்டுக்கல் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் 400க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் சிவகுமார், துணை பொதுச் செயலாளர் பிரகாஷ், மக்கள் தொடர்பு செயலர் சதீஷ் செய்திருந்தனர்.

