/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே ஸ்டேஷன்களில் இல்லை டிஜிட்டல் போர்டுகள்; ரயில் பெட்டிகள் நிற்கும் இடம் அறிய தவிக்கும் பயணிகள்;

ADDED : ஏப் 16, 2025 05:09 AM

மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, கொடைரோடு உட்பட பல இடங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.
திண்டுக்கல்- பழநி வழித்தடத்தில் பாலக்காடு ,- சென்னை, சென்ட்ரல், திருவனந்தபுரம் -மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பழநி ,ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன்களில் ஏராளமானோர் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் கொடைரோடு வடமதுரை உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது மக்கள் பயணம் செய்கின்றனர்.
திண்டுக்கல் ஜங்ஷனில் மட்டுமே பெட்டிகள் நிற்கும் இடத்தை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் போர்டு வசதி உள்ளது. ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, சத்திரப்பட்டி, கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன்களில் இத்தகைய வசதி இல்லை. இதனால் பயணிகள் ரயில் வந்து நிற்கும் நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியை கண்டுபிடிக்க பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
பயணிகள் எளிதில் தங்களது பெட்டியை கண்டுபிடிக்கும் வகையில் டிஜிட்டல் அறிவிப்புப் பலகை வசதியை ஏற்படுத்தித் தர ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
பாலசுப்பிரமணியன்