/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் இல்லை சாக்கடைகள்;கொசுக்கள் உற்பத்தியும் ஜோர் சிரமத்தில் திண்டுக்கல் 12வது வார்டு மக்கள்
/
எங்கும் இல்லை சாக்கடைகள்;கொசுக்கள் உற்பத்தியும் ஜோர் சிரமத்தில் திண்டுக்கல் 12வது வார்டு மக்கள்
எங்கும் இல்லை சாக்கடைகள்;கொசுக்கள் உற்பத்தியும் ஜோர் சிரமத்தில் திண்டுக்கல் 12வது வார்டு மக்கள்
எங்கும் இல்லை சாக்கடைகள்;கொசுக்கள் உற்பத்தியும் ஜோர் சிரமத்தில் திண்டுக்கல் 12வது வார்டு மக்கள்
ADDED : அக் 13, 2024 05:05 AM

திண்டுக்கல்: மழை நேரத்தில் வீதிகளில் ஆறாய் ஓடும் கழிவுநீர், மக்களை கடித்து குதறும் கொசுக்கள், சாக்கடைகள் இல்லாததால் ரோட்டில் மழைநீரோடு தேங்கும் கழிவு நீர் என பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 12 வது வார்டு மக்கள்.
கோபாலசமுத்திரம்,நாராயணாநகர்,கிருஷ்ணாராவ் தெரு,சரஸ்வதி காலனி, பிள்ளையார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
கொசு மருந்துகள் அடிப்பதும் குறைவாக இருப்பதால் கொசுக்கள் வாயிலாக நோய் தொற்றுகள் பரவுகிறது. கால்நடைகள் தாராளமாக சுற்றுவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சாக்கடைகள் தரமற்ற முறையில் இருப்பதால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோடுகளில் ஆறுகளாக ஓடுகிறது.
கொசு மருந்து அடிப்பதில்லை.
சுந்தரி, கோபாலசமுத்திரம் : மழைக்காலம் தொடங்கிவிட்டது ஆனால் கொசு மருந்து அடிப்பதில்லை. குப்பை தேங்கி நிற்கிறது. இதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சில இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளன அதனை சரிபார்க்க வேண்டும்.
ரோட்டில் கழிவுநீர்
சுகுமார், 108 விநாயகர் கோயில் ரோடு : சாக்கடைகள் இல்லாததாலும், சில சாக்கடை அகலம் குறைவாகவும்,நீண்ட நாட்களாக துார்வாராமலும் இருப்பதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மழை நேரங்களில் ரோடுகள் வழியாக ஆறாக ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பாலகிருஷ்ணன், பழநி ரோடு : பிரதானமாக பழநிக்கு சென்று வரும் இரு ரோடுகள் எங்கள் பகுதியில் உள்ளன. அதிகளவில் கார்கள், டூவீலர்கள் என ரோட்டில் நிறுத்தி சென்றுவிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி முடியும் மாலை நேரங்களில் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்படுகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஜானகிராமன்,கவுன்சிலர்(தி.மு.க.,): மழைநீர், கழிவுநீர் எதுவும் தேங்கா வண்ணம் தற்போது சத்திரம் தெரு அருகே பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் பணிகள் முடிந்துவிடும். கோபாலசமுத்திர குளத்தினை துார்வார தற்போது தண்ணீர் நிற்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்துகள் அடிக்க முயற்சி செய்துள்ளேன். அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.