/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதுவும் அவசியம்தானே *வெயிலின் தாக்கத்தை தணிக்க குடிநீர்,நிழற்குடைகள் *மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வழி காணலாமே
/
இதுவும் அவசியம்தானே *வெயிலின் தாக்கத்தை தணிக்க குடிநீர்,நிழற்குடைகள் *மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வழி காணலாமே
இதுவும் அவசியம்தானே *வெயிலின் தாக்கத்தை தணிக்க குடிநீர்,நிழற்குடைகள் *மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வழி காணலாமே
இதுவும் அவசியம்தானே *வெயிலின் தாக்கத்தை தணிக்க குடிநீர்,நிழற்குடைகள் *மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வழி காணலாமே
ADDED : மார் 20, 2025 05:28 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் , தற்காலிக நிழற்குடைகள் ஏற்படுத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் , கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆரம்பமே இப்படி இருந்தால் அக்னி வெயில் வந்தால் சொல்லவே வேண்டாம் . அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பணி நிமித்தமாக வெயிலை பொருட்படுத்தாமல் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வெயிலின் தாக்கத்தால் அவ்வப்போது சிலர் மயங்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. கடந்தாண்டு சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட்கள், சந்தை பகுதிகள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் முனைப்பு காட்ட வேண்டும். பல பஸ் ஸ்டாப்களில் நிழற்குடைகளும் பயன்பாடற்று கிடக்கிறது. இது போன்ற இடங்களில் தற்காலிக நிழற்குடைகள் ஏற்படுத்த வேண்டும். தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க முன் வர வேண்டும்.அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நேரங்களில் தேர்வு அறைகளிலும் தண்ணீர் வசதி செய்ய வேண்டும். மாணவர்களின் விஷயத்தில் பள்ளி நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
.........
முதலுதவிக்கும் ஏற்பாடு
பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தற்காலிக நிழற்குடைகள் ஏற்படுத்தி கொடுப்பதோடு, முதலுதவி செய்வதற்காக முக்கிய இடங்களில் மருத்துவக்குழுவினர் எப்போதும் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வெயில் தான என அலட்சியப்படுத்திவிடக்கூடாது. பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்தும்போது பங்கேற்பாளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழல் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்பவர்கள் உறுதி செய்வதை ,அனுமதி கொடுக்கும் போலீசார் உட்பட இதர அரசுத்துறையினரும் கண்காணிக்க வேண்டும்.
சிவபாரதி, அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் , திண்டுக்கல்.
..............