/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது
/
திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது
திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது
திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்து செல்ல முயன்றவர்கள் கைது
ADDED : பிப் 05, 2025 05:44 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.
பழநி பா.ஜ., கட்சி அலுவலகத்தில் பூஜைகள் செய்த காவடிகளுடன் காலை 11:00 மணிக்கு திருப்பரங்குன்றத்திற்கு பா.ஜ., மகளிரணியினர் திண்டுக்கல் முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் புறப்பட்டனர். அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரையாக வந்த பா.ஜ.,வினரை டி.எஸ்.பி., தனஜெயன் தலைமையிலான போலீசார் தடுத்து கைது செய்தனர்.
நகரத் தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் குஜிலியம்பாறையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல புறப்பட்டனர்.
குஜிலியம்பாறை போலீசார் பா. ஜ., வினர் 17 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூர்யா தலைமை வகித்தார்.
விவசாய அணி மாவட்ட தலைவர் நாட்டுத்துரை, வர்த்தக அணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ், இளைஞர் அணி நகரத் தலைவர் மணிமாறன் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒட்டன்சத்திரம் நகர தலைவர் குமாரதாஸ், மாநில பொது குழு உறுப்பினர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர் ரகுபதி கைது செய்யப்பட்டனர்.