/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் அருகே ஆயிரமாண்டு பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு
/
ஒட்டன்சத்திரம் அருகே ஆயிரமாண்டு பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு
ஒட்டன்சத்திரம் அருகே ஆயிரமாண்டு பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு
ஒட்டன்சத்திரம் அருகே ஆயிரமாண்டு பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டெடுப்பு
ADDED : ஜன 03, 2025 06:42 AM

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே பொருளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர், வளரியுடன் கூடிய அய்யனார் சிற்பங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் வீ.அரிஸ்டாட்டில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் மு.லட்சுமணமூர்த்தி, வாகை கோபாலகிருஷ்ணன் அடங்கிய குழு ஒட்டன்சத்திரம் பொருளூர் பகுதியில் மேற்பரப்பாய்வு மேற்கொண்டனர். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான அய்யனார் சண்டிகேஸ்வரர் சிற்பங்களை கண்டறிந்தனர். இவர்கள் கூறியதாவது:
பழங்கால பயன்பாட்டு கருவிகளில் ஒன்றான வளரியை தனது வலது கையில் பிடித்தவாறு அய்யனார் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பம் மூன்றரை அடி உயரம் ,இரண்டரை அடி அகலம் கொண்டது. பலவகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி அகன்ற ஜடா பாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலம், மார்பில் ஆபரணங்கள், தோல் புஜங்களில் வளைவுகள், கைகள், கால்களில் அணிகலன்கள் அணிந்தபடியும், இடையில் இடைக்கச்சை அணிந்தபடி இடது காலினை மடக்கியும் வலது காலை தொங்கவிட்டும் உட்குதியாசன கோலத்தில் அமர்ந்தவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இடது காலையும் இடையையும் இணைக்கும் விதமாக யோகப்பட்டை இடம் பெற்றுள்ளது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து 9 அல்லது பத்தாம் நுாற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் காலத்தை சேர்ந்ததாக கருதலாம் .மேலும் இங்கு ஒரு சண்டிகேஸ்வரர் சிற்பமும், திருமால் சிற்பமும் காணப்படுகிறது .இவை அனைத்தும் ஒரே காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இவ்விடத்தில் பல்வேறு வகையான நடு கற்களும் காணப்படுகின்றன என்றனர்.

