ADDED : ஜூலை 10, 2026 04:11 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுப்பட்டி சுடுகாடு அருகே தகர செட்டில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் சட்டவிரோதமாக கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சென்று சோதனை செய்தனர்.
அதில் 25 மூடைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரித்த போலீசார் முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி அமல்ராஜ் 57, அற்புதமேரி 51, அவர்களது மகன் அந்தோணி டேனி 29, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1,500 கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
