தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கூலித்தொழிலாளி கொலையில் மூவர் கைது

கூலித்தொழிலாளி கொலையில் மூவர் கைது

கூலித்தொழிலாளி கொலையில் மூவர் கைது


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 09:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் 52, மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜித்குமார் 26, இருவரும் நவ., 2-ல் கொடைரோடு தனியார் ஓட்டலில் சாப்பிட்டனர்.

அப்போது மேஜைக்கு அடியில் ரூ.25 ஆயிரம் கிடந்ததை அஜித்குமார் எடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட லட்சுமணன் யாருடைய பணம் என விசாரித்து கொடுத்து விடலாம் என கூறினார்.

பின்னர் யாரிடமும் கொடுக்காததை அறிந்து மறுநாள் லட்சுமணன் வீட்டிற்கு சென்ற அஜித்குமார், தான் ஓட்டலில் கண்டெடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அப்போது லட்சுமணன், அவரது மகன் உதயகுமார் 30, இருவரும் பணத்தை கொடுக்க மறுத்து அஜித்குமாரை தாக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் மைக்கேல்பாளையத்தில் இருந்து நாகையகவுண்டம்பட்டிக்கு லட்சுமணன் டூவீலரில் வந்தபோது வழிமறித்த அஜித்குமார், அவரது நண்பர்கள் வெட்டிக்கொலை செய்து தப்பினர்.

விசாரித்த அம்மையநாயக்கனுார் போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்குமாரின் நண்பர்களான மீனாட்சிபுரம் பிச்சைமுத்து (எ) மூக்கையா 30, வாசுதேவன் 23, ஜல்லிபட்டி கலைஞர் (எ) ரஞ்சித்குமார் 30, ஆகிய மூவரை கைது செய்தனர். அஜித்குமார் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us