/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
4 மாநிலங்களில் தொடர் கைவரிசை மங்கி குல்லா கொள்ளையர்கள் மூவர் கைது
/
4 மாநிலங்களில் தொடர் கைவரிசை மங்கி குல்லா கொள்ளையர்கள் மூவர் கைது
4 மாநிலங்களில் தொடர் கைவரிசை மங்கி குல்லா கொள்ளையர்கள் மூவர் கைது
4 மாநிலங்களில் தொடர் கைவரிசை மங்கி குல்லா கொள்ளையர்கள் மூவர் கைது
ADDED : மே 10, 2025 02:39 AM

திண்டுக்கல்:தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வீடுகளில் மங்கி குல்லா அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துாரைச் சேர்ந்தவர் சுதாகர் 45. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மகனுார்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த் 24. மாரம்பட்டியைச் சேர்ந்தவர் தன்ராஜ் 28. இவர்கள் மூவரும் காரில் திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரி அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்தனர். இவர்களின் காரை மேற்கு போலீசார் சோதனை செய்த போது, அதில் வீடு, கடைகளை உடைத்து கொள்ளையடிக்க தேவையான பொருட்கள் இருந்ததால் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
இவர்கள் மூவரும் தமிழகத்தில் பல பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வீடுகளில் மங்கி குல்லா அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், கொள்ளையடித்த பணத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ. 20 லட்சத்திற்கு நிலங்களை வாங்கியதும், இவர்களை 4 மாநில போலீசார் தேடி வருவதும் தெரிந்தது.
எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., கார்த்திக், இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் தொடர் விசாரணை செய்ததில் கடந்த மார்ச் மாதம் திண்டுக்கல் ஆர்.எம்., காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம், வடமதுரையில் ஒரு வீட்டில் வைர நெக்லஸ், வெள்ளி குத்து விளக்கு கொள்ளை அடித்ததும், சென்னையில் ஒரு திருட்டு கார் பதுக்கி வைத்திருப்பதும், மீண்டும் திண்டுக்கல்லில் கொள்ளையில் ஈடுபட வந்ததும் தெரிந்தது.
இவர்களிடம் இருந்து வைர நெக்லஸ், ரூ. 40 ஆயிரம், கத்தி, வெள்ளி குத்து விளக்கு அடிப்பகுதி, கையுறைகள், மங்கி குல்லாக்கள், கார், 5 அலைபேசிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.