/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்மேலாண்மைக்கும், பசுமை பாதுகாப்புக்கும் மத்திய அரசின் விருதை பெற்ற திண்டிமாவனம்
/
நீர்மேலாண்மைக்கும், பசுமை பாதுகாப்புக்கும் மத்திய அரசின் விருதை பெற்ற திண்டிமாவனம்
நீர்மேலாண்மைக்கும், பசுமை பாதுகாப்புக்கும் மத்திய அரசின் விருதை பெற்ற திண்டிமாவனம்
நீர்மேலாண்மைக்கும், பசுமை பாதுகாப்புக்கும் மத்திய அரசின் விருதை பெற்ற திண்டிமாவனம்
ADDED : ஏப் 07, 2025 05:53 AM

-திண்டுக்கல் நகரில் வன பகுதிகளை மேம்படுத்தி மழை அளவை அதிகரிக்க திண்டிமாவனம் இயக்கத்தினர் மரக்கன்றுகளை நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
திண்டிமாவனம் இயக்கம் 2016 துவங்கப்பட்டு தற்போது 1 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க 200 கிலோமீட்டருக்கு வரத்து வாய்க்கால்கள், 2000 ஏக்கரில் 36 கண்மாய்கள் அரசுடன் இணைந்து துார்வாறியுள்ளனர். 129 வகை மரங்களுடன் தாவரவியல் பூங்கா உருவாக்கி மக்களின் மத்தியில் இயற்கையின் அவசியத்தை காட்டுகின்றனர். மாநகராட்சியோடு இணைந்து, நிலம், காற்று, நீர் மாசுகளை தவிர்க்க பொன்மாந்துறையில் 20 ஆயிரம் மரங்களோடு மியாவாக்கி முறையில் குறுங்காடு நட்டு பராமரித்து வருகின்றனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்கின்றனர். மேலும், பழமையான மரங்களை வெட்டாமல் அதனை வேறோடு பெயர்த்து எடுத்து வேறு இடத்தில் நடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்கின்றனர். 70 க்கும் மேற்பட்ட மரங்களை வேறோடு பெயர்த்து வேறு இடத்தில் நட்டுள்ளனர். மழை நேரத்தில் மரங்களை நடவு செய்வதோடு மட்டுமில்லாமல் அதை 3 ஆண்டுகள் பராமரிக்கவும் செய்கின்றனர். திண்டிமாவனம் இயக்கத்தினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பதை தாரக மந்திரமாக வைத்திருக்கின்றனர். நீர்மேலாண்மைக்கும், பசுமை பாதுகாப்புக்கும் மத்திய அரசின் தேசிய அளவிலான விருதையும் இந்த அமைப்பினர் பெற்றுள்ளனர்.
வர்த்தக சங்கம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை போர்வையை உருவாக்கவும், நீர்மேலாண்மையில் மேலும் சிறப்புற செயல்படவும் முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
சுற்றுச்சூழலை காக்க அனைவரும் முன்வர வேண்டும்
பேராசிரியர், ராஜாராம்: மரங்களை நடுவதினால் அதிகளவு மழை பெறலாம்.சுற்றுச்சூழல் சீர்கேடாகாது. திட்டிமானவத்தைப் பார்த்து பல குழுக்கள் அதேபோல் உருவாகியுள்ளன. மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இயற்கை பாதுகாக்க திண்டிமானம் எவரிடமும் பணமும் பெறவில்லை. இதைப்போல தன்னார்வ அமைப்புகள் பல உருவாக வேண்டும். தற்போது அரசு பள்ளிகள், ரோட்டோரங்களில் மரங்களை நடவு செய்ய முடிவெடுத்துள்ளோம். இயற்கையின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இயற்கையை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலை காக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.
மரங்களை பாதுகாப்பது அவசியம்
பழனிகுமார், திண்டிமானவம் : மக்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும். சமூக அக்கறை அனைவருக்கும் இருந்தால் மட்டுமே சுகாதாரமான நகரத்தை உருவாக்க முடியும். மரங்கள் மண் அரிப்பை தடுக்கின்றன. அதிகளவில் சமூக ஆர்வலர்கள் மரங்களை நடவு செய்கின்றனர். மரங்களை நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும். ரோடு முதல் அனைத்து விரிவாக்க பணிகளும் தேவை தான். ஆனால், இயற்கையும், சுற்றுச்சூழலும் மிகவும் முக்கியம். மரங்களை பாதுகாப்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.